search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஊழியர் கைது"

    • திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த ெபண்ணுடன் பிரபாகரன் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • இந்த விவரம் குறித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக தனியார் மருத்துவமனையில் கர்ப்பத்தையும் கலைந்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் அரசு பணிக்காக போட்டி தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார்.

    அதேபகுதியைச் சேர்ந்த தனசீலன் மகன் பிரபாகரன் (35). இவர் சேலம் மாவட்டத்தில் லேபர் கோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அந்த பெண், பிரபாகரனும் போட்டி தேர்வுகளுக்காக படித்து வந்தபோது, அதற்காக விண்ணப்பிப்பதற்காக தனது படிப்பு சான்றிதழ் மற்றும் சுயவிவரங்களை அவரிடம் கொடுத்தார். அப்போது அதில் இருந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து கொண்டு தினமும் பிரபாகரன் அவரிடம் பேசிவந்தார்.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் பலஇடங்களில் காதலர்களாக சுற்றி வந்ததாக தெரிகிறது. அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

    இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அதன்பின்னர் இந்த விவரம் குறித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக தனியார் மருத்துவமனையில் கர்ப்பத்தையும் கலைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பிரபாகரனுக்கு அரசு வேலை கிடைத்தது. இதனால் அவர் அந்த பெண்ணிடம் பேசாமல் இருந்து வந்தார். அவர் பலமுறை பிரபாகரனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பிரபாகரன் கற்பழித்து விட்டதாக கூறி புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

    • மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • திருநகர் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை எஸ்.ஆர்.வி.நகரை சேர்ந்த வேல் முருகன் மனைவி சாந்தி (வயது 40). இவர் திருநகர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், எனது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கூடல்புதூர் சீனி வாசா நகரை சேர்ந்த உதயகுமார் (வயது44) என்பவர், என்னிடம் ரூ.7 லட்சம் வாங்கினார்.

    ஆனால் எனது மகனுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்ைல. எனவே நான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். அப்போது அவர் போலியான பணிநியமன ஆணையை வழங்கினார். இதுபற்றி தெரியவந்ததும் நான் உடனடியாக பணத்தை வழங்கும்படி கேட்டேன்.

    அப்போது உதயகுமாரும், அவரது மனைவி சுமதியும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், போலீசாருக்கு உத்தர விட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் ரவி ஆலோசனை ப்படி, திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையின்போது, சாந்தி அவர் கொடுத்த பணம், போலி நியமன ஆணை உள்பட அத்தனை ஆவணங்களையும் சமர்ப்பித்தார். இதனை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதன் அடிப்படையில் உதயகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக சாந்தியிடம் ரூ. 7 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உதயகுமாரை திருநகர் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக உதயகுமார் மனைவி சுமதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×